Author: gpkumar

நம் அன்றாட உணவில் அதிக அளவு காய்கள் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. நம் உடலுக்கு தேவையான சத்துகள் காய்களில் தான் அதிகம் உள்ளது. தினமும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை நாம் சாப்பிடுவது மிகவும் அவசியம். அந்த வகையில் “வெண்டைக்காய்” நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வெண்டைக்காயின் நன்மைகள் பல காலமாகவே வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும் என்று இந்த காயினை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்கிறார்கள். மேலும் கல்வி பயிலும் குழந்தைகள் வெண்டைக்காய் அதிகம் சாப்பிடுவதால் அவர்களின் மூளைவளர்ச்சி, மூளை செயல் திறன் ஆகியவை அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். மூளை சுறுசுறுப்பாக இயங்கினால் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய முடியும். இதனால் வெண்டைக்காயை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. ஞாபகசக்தி அதிகரிக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். குறிப்பாக முதியவர்களுக்கு அதிக ஞாபக மறதி இருக்க கூடும்.…

Read More

பிரபு சாலமன் தமிழகத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற இயக்குனராவார். இவர் காதல் கோட்டை  படத்தின் இயக்குநரான அகத்தியன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.தற்போது இவர் நடிகர் ஆகிறார். பிரபு சாலமன் இயக்கிய முதல் திரைப்படம் கண்ணோடு காண்பதெல்லாம். மேலும் இவர் கும்கி,மைனா,கயல் ,தொடரி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இயக்குனர்கள் நடிகர்களாவது சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சமீபத்தில் கவுதம் மேனன், மோகன் ராஜா, சுசீந்திரன், பாலாஜி சக்திவேல் ஆகிய இயக்குனர்கள் நடிகர் ஆனார்கள். மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படம் “அழகிய கண்ணே” இந்த படத்தில் பிரபு சாலமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .இந்த  படத்தை   விஜயகுமார் இயக்குகிறார். இந்த படத்தின்  கதையும் , கதாபாத்திரமும் பிரபுசாலமனுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது.  இந்த படத்தில் பிரபு சாலமன் நடிகராக முதன் முதலாக நடிக்கிறார். பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன், லியோ சிவக்குமார் இந்த படத்தில் கதாநாயகனாக…

Read More

அகமதாபாத்தில் 63 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கயுள்ளது. 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி, கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்காக சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகியுள்ளது. இந்த கிரிக்கெட் மைதானத்தில் 4 நுழைவு வாயில்களும் , 11 ஆடுகளங்களும் உள்ளன. 8 செ.மீ. வரை மழை பெய்தாலும் போட்டி ரத்தாகாமல், உடனடியாக மழை நீரை உறிஞ்சி வெளியேற்றும் அளவிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் நிழல் விழாத அளவுக்கு பிரத்யேக எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே உள்ளரங்கு கிரிக்கெட் பயிற்சி அகாடமி, பிரம்மாண்ட உணவகம், மினி 3டி…

Read More

6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் கட்டாயம் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மாணவர்களுக்கு இது ஒரு அசத்தலான அறிவிப்பாக கருதப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். இன்று துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலை அறிவித்து வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் இன்று, 2021-22 ஆம் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறினார். மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலும் மதிய உணவுத் திட்டத்திற்காக 1,953 கோடி…

Read More

மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரிய துறையில்  களப்பணிக்காக உருவாக்கப்பட்ட 5000 கேங்மேன் பணிகளுக்கு 2019ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்றும், புதிய பணியாளர்கள் தேர்வு செய்யக் கூடாது என்றும்  உத்தரவிட்டு இருந்தார்கள். பிப்ரவரி 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் நியமனத்தை உறுதி செய்த பிறகுதான் புதிதாக கேங்மேன் இடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறினார்கள். மேலும் 2019ஆம் ஆண்டு வெளியான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கூறப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் அனைத்து விதிகளும் பின்பற்றபட்டதாக கூறினார்.…

Read More

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் நடிப்பில் வெளியாகி, வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 2016-ல் திரைக்கு வந்த ‘இருமுகன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருகின்றன . ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர், இந்தி பதிப்பையும் இயக்குவதாக என்று கூறப்படுகிறது. இதில் நடிப்பவர்கள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, விஜய்யின் மாஸ்டர், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ போன்ற படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு…

Read More

சென்னையில் ஒரு சில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கில்,மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும், கீழடுக்கில் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாகவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு. இன்று முதல் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். பிப்ரவரி 21ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிவுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 22ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையாகவே…

Read More

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக உணவு வழங்கல் துறை பிறப்பித்துள்ள உத்தரவை பார்ப்போம். தமிழகத்தில் ஒரு கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இல்லாத அட்டை என மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர், எடையாளர் என இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பல கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணத்தால் ஒருவரே, இரண்டு பேரின் வேலையை பார்க்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையில் ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு மேலுள்ள கடைகளில் பொருட்களை விரைவாக வழங்க கூடுதலாக ஒரு ஊழியரை நியமிக்குமாறு உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத் துறைக்கும், நுகர்பொருள் வாணிபத்திற்கும் ரேஷன் கடைகளில் கூடுதலாக ஊழியரை நியமிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.ரேஷன் கடை ஊழியர்கள் நியமனத்தில்…

Read More

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இன்றைய வரைக்கும் உயிர்க்கொல்லி நோய்கள் என்ற பட்டியலில் மக்கள் மனதில் முதலிடம் பிடித்திருக்கும் நோய் எய்ட்ஸ் தான். எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாத அபாயகரமான நோய் எய்ட்ஸ் தான். இந்த நோய் விழிப்புணர்வின் மூலம் தான் கட்டுப்படுத்த முடியும் என்று அரசும், தன்னார்வாளர் அமைப்புகளும் செயல்பட்டு வந்தன. இந்த நோய் எளிதில் குணப்படுத்தமுடியாத நோயாக கருதப்பட்டது. இந்நிலையில் சென்னை ஐஐடி-யில் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சந்தீப் சேனாபதி தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் எம்.முகமது ஹாசன், சின்மய் பிந்தி ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழு எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார்கள். அமெரிக்கன் கெமிக்கல்சொசைட்டி ஆய்விதழில் இந்தக் குழுவினரின் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து “மருந்துகளை செயல்படாமல் செய்யும் திறனுள்ள எய்ட்ஸ் நோய்க்கு, அதன் பலவீனமான பகுதியை மட்டும் கண்டறிந்து,நோய்க்கான மூலக்கூறு அமைப்பை சிதைக்கக் கூடிய…

Read More

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் வேலைபார்க்கும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கி உள்ளார். இதில் தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். தற்காலிக…

Read More

தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் செய்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், “தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப் போல நானும் ‘ இப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் உள்ளேன்’’ என்று டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். தமிழகம் முழுவதும் உள்ள தனுஷ் ரசிகர்கள் ‘ஜகமே தந்திரம்’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டினர். இதையடுத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது. ஆனால் ‘ஜகமே தந்திரம்’ படத்தை தயாரித்த நிறுவனம் தான் ‘ஏலே’ பட த்தையும் தயாரித்தது. இந்த படம் ஓ.டி.டி.யில் வெளியாகிவிட்டது. அதனால் தியேட்டர் அதிபர்கள் ‘ஜகமே தந்திரம்’ படத்தை திரையரங்கில் வெளியிட…

Read More

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பெடிக்கும் இடையே கடுமையான மோதல் உருவாகி வந்தது. துணை நிலை ஆளுநரை மாற்றவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி போர்க்கொடி எழுப்பி வந்தார். இதை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 16 ஆம் தேதி கிரண் பெடியை திரும்பப்பெறுவதாக கூறினார். இதற்கிடையே, தெலுங்கானாவில் 2- வது ஆளுநராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில ஆளுநர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இன்று காலை 9 மணிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டதை தொடர்ந்து, பொறுப்பு ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பொறுப்பு ஏற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதுச்சேரியில் 5-வது பெண் துணை நிலை…

Read More

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்து ரவிகுமார் இயக்கத்தில் முடித்துள்ள படம் அயலான். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அயலானில் வரும் ‘வேற லெவல் சகோ’ பாடல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இன்று காலை வெளியிட்டனர். பாடலை கேட்ட சிவகார்த்திகேயன் மற்றும் ரசிகர்கள் ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ், ரொம்ப நல்லா இருக்கு என்றெல்லாம் தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் பர்த்டே ட்ரீட் ஆக வெளியான ‘வேற லெவல் சகோ’ பாடல் நெஜமாவே வேற லெவல் தான் என்று கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது தான் ட்வீட் போட்டுயிருக்கிறார் ரஹ்மானின் ட்வீட்டைரை பார்த்து சிவகார்த்திகேயன் மற்றும் ரசிகர்கள் கூறுவது ரொம்ப நன்றி சார். பாட்டு அருமையாக உள்ளது. உங்களின் வாய்ஸை கேட்டு மெய் சிலுக்கிறது. ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஜீனியஸ் தான் என்று கூறுகிறார்கள்.

Read More